கனடாவில் அனுரவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தமிழ் இளைஞனின் நடவடிக்கை
தமிழர்களின் இனப்பிரச்சினை விடயம் தொடர்பில் தங்களின் நிலைப்பாடு என்னவென்று கனடாவில் அனுரவிடம் தமிழில் கேள்வியெழுப்பிய தமிழ் இளைஞனின் செயற்பாடு நியாயமானது என அமெரிக்க சாஸ்பெரி பல்கலைக்கழகம் பேராசிரியர் கீத பொன்கலன் (Geetha Pongalan) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் கேள்விக்கு பதிலளிக்காது அநுரகுமார தடுமாறியிருந்த நிலையில், இளைஞன் பலவந்தமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில், ஜே.வி.பிக்கு இன்றுவரை இனப்பிரச்சினை தொடர்பில் சிங்கள தேசியவாதத்தின் சிந்தனையை தாண்டிய எந்தவொரு தீர்வு திட்டமும் இல்லை.
அதாவது ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பிக்கு தமிழ் மக்களின் வாக்கு அவசியம் என்ற காரணத்தினால் அவர்கள் இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக உள்ளதாகவும், கதைக்கும் பட்சத்தில் சிங்கள தேசியவாதத்தின் சிந்தனைகள் வெளிப்படும் என்ற அச்சத்தில் அமைதியாக உள்ளதாகவும் கூறியுள்ளாார்.
கடந்த காலத்தில் ஜே.வி.பி தீவிரமான தமிழ் விரோத கொள்கையை பின்பற்றி வந்த கட்சி என்பதுடன், மக்களுக்கான அனைத்து சலுகைகளையும் எதிர்த்து வந்த கட்சியாகும். தற்போது கட்சிக்கு தமிழ் மக்களின் வாக்கு அவசியம் என்ற காரணத்தினால் அமைதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
