பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த தமிழ் இளைஞன்! குவியும் பாராட்டுக்கள் (Video)
பாக்குநீரினை கடந்து தமிழ் இளைஞன் நிகழ்த்திய சாதனையானது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பாக்கு நீரினையை நீந்திக்கடந்து சாதனை படைத்த இளைஞரை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விருது பெற்ற இளைஞன்
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் இன்று தலைமன்னார் துறைமுகத்திலிருந்து பாக்கு நீரினையை நீந்திக்கடந்து சாதனை படைத்துள்ளார்.
இதற்காக இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து அதிகாலை இரண்டு மணிக்கு தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்து பாக்கு நீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை பகல் 2.00மணியளவில் வந்தடைந்தார்.
நீச்சல் சாதனை
நீச்சல் பயணத்தில் 32கிலோ மீற்றர் தூரமுடைய பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ளார்.
தற்போது 20 வயதான மதுஷிகன், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பன்னிரண்டு வயதில் தனது நீச்சல் பயிற்சியை ஆரம்பித்து மாகாண மற்றும் திறந்த மட்ட நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளார்.
இதுவரை நீச்சல் திறமைக்காக 12 பதக்கங்களை வென்றெடுத்துள்ள மதுஷிகன் கல்வி பொதுத் தராதர உயர் தரத்தில் கணித துறையில் தமது பாடசாலைக் கல்வியை கற்றதுடன் இலங்கை சாரணியப் படையில் இணைந்து தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
இவர் நீந்தி சாதனை படைத்துள்ள நிலையில் அவரை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பத்மராஜா கலாவதி மற்றும் மன்னார் அரசாங்க அதிபர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: குமார்
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவனும், ஜனாதிபதி சாரணர் விருது பெற்றவருமான தேவேந்திரன் மதுஷிகன் (வயது20) பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இன்று (28.05.2023) அதிகாலை 1 மணியளவில் தனுஷ்கோடியிலிருந்து தலை மன்னாரை நோக்கி தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்த தேவேந்திரன் மதுஷிகன் பிற்பகல் 03.05 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை
தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள சுமார் 30 கிலோ மீற்றர் தூரத்தை பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இதன் போது அருட்தந்தையர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி
பத்மராஜா , மன்னார் மாவட்ட சாரணர் இயக்க ஆணையாளர் ஸ்ரான்லி டிமேல் லெம்பேட்
,வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம், சாள்ஸ்
நிர்மலநாதன் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)
மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மன்னார்
நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞ.அன்ரனி டேவிட்சன், நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்த ,ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின்
மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் ,தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின்
மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன்ராஜ்,ஏ.கே.ஆர்.நிறுவன பணிப்பாளர் றொஜன் உட்பட
பலரும் கலந்துகொண்டு வரவேற்றனர்.
















ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
