கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை! - மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது
கனடா - ஸ்காபரோவில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிஷன் குகதாசன் என்ற 19 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
ரொறோண்டோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 23ம் திகதி முறைப்படு கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ரொறோண்டோவைச் சேர்ந்த 19 வயதான அனோஜ் தர்சன் என்ற சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும், அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்தவர்கள், 1-888-579-1520 ext என்ற இலக்கத்துடன் ,தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.