கனடாவில் காணாமல்போன தமிழ் இளைஞர்!பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
கனடாவில் தமிழ் இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, ஆறுமுகம் ரகுநாதன் என்ற 30 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காணாமல்போயுள்ள இளைஞர் தொடர்பிலான தகவல்களையும், புகைப்படத்தினையும் பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன்,பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கையொன்றினையும் முன்வைத்துள்ளனர்.
MISSING:
— Toronto Police Operations (@TPSOperations) November 24, 2021
Arumugam Ragunathan, 30
- last seen on Nov. 23 at 7:20 p.m., in the Danforth Ave & Victoria Park Ave area
- described as 5'3", slim build, black curly hair
- last seen wearing a dark navy zip up sweater with hood, dark pants, grey shoes, blue cap#GO2262402
^al pic.twitter.com/J9PAVESae7
குறித்த இளைஞர் நவம்பர் 23 ஆம் திகதி மாலை 7.20 மணியளவில் கடைசியாக Danforth Ave & Victoria Park Ave பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,5 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட ஆறுமுகம் மெலிதான உடலமைப்பு மற்றும் கருப்பு சுருட்டை முடி கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காணாமல்போயுள்ள இளைஞர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரிடம் தெரிவிக்கும் படியும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.