கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது! (Photo)
கனடாவில் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப் படுத்திய தமிழ் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Markham நகரை சேர்ந்த 25 வயதான ஜெனிசன் ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Markham massage நிலையத்தில் இலவச பாலியல் சேவைக்கான அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், இவர் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாள படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் கடந்த 8ம் திகதி நிகழ்ந்தது. கைது செய்யப்பட்டவர் காவல்துறையில் பணியாற்றவில்லை என்பதை York பிராந்திய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இனிவரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பொலிஸார் கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை வெளியிட்டனர்.
எவ்வாறாயினும், இவர் மீதான குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam