கனடா செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் விமான நிலையத்தில் கைது
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட இளைஞன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசத்தில் வசிக்கும் இவர் 24 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 3.15 மணிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நோக்கி பயணிக்கவிருந்த எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் பயணிப்பதற்காக இவர் விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
அதன் பின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினர் மேற்கொண்ட தொழினுட்ப ரீதியான பரிசோதனையின் போது கனடாவுக்கான கடவுச் சீட்டு போலியான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கார் வாங்கியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர் பாண்டியன்... மனைவியுடன் வெளியிட்ட வீடியோ இதோ Cineulagam
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam