சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் தமிழ் மாணவர்கள் பங்கேற்பு (Photos)
சுவிட்சர்லாந்தின் கிளாறூஸ் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ஏராளமான சுவிஸ் வாழ் தமிழ் மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர்.
சுவிட்சர்லாந்து அமைப்பின் 5ஆவது ஜப்பான் கராத்தே தோ இத்தோசுக்காய் (JKI) சுற்றுப்போட்டி 2023 அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இந்த கராத்தே போட்டியில் சுவிட்சர்லாந்திலிருந்து சுமார் 120 தமிழ் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பிரதம நடுவராக இலங்கை ஆசிரியர்
JKI சுவிட்சர்லாந்தின் தலைமையாசிரியர் சிஹான்.வி.கெளரிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டிக்கு இலங்கையில் இருந்து சென்ற சிரேஷ்ட ஆசிரியர் சிஹான். R.J.அலெக்ஸ்சாண்டர் பிரதம நடுவராக அங்கம் வகித்துள்ளார்.
இதேவேளை அடுத்த வருடம் இந்த போட்டி பேர்ண் மாநிலத்தில் நடத்தப்படவுள்ளதாக நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ரூ 24,000 கோடி மதிப்பிலான மாளிகையில் வசிக்கும் பெண்மணி: அவரது குடும்ப சொத்துக்களின் மதிப்பு News Lankasri

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri
