பெயர் பலகையில் தமிழ் எழுத்து பிழை: வெடிக்கும் சர்ச்சை (Photos)
இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பெயர்ப் பலகை ஒன்று தமிழ் எழுத்துப் பிழைகளுடன் காணப்படுகிறமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெயர்ப் பலகையில் 'இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்' என்பதற்குப் பதில் புரியாத பல வேறுபட்ட எழுத்துக்கள் கொண்டிருக்கத்தைக் காணக் கூடியதாகவுள்ளது.
இவ்வாறு இலங்கையில் பல்வேறு பொது இடங்களிலும், ஏன் கல்வி நிலையங்களிலும் கூட நூற்றுக்கணக்கில் தமிழ் எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றன. அவ்வாறானதொரு பிழை தான் இது என தமிழ் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கொலை செய்யாதீர்கள்
இது தொடர்பில் சமூகவலைத்தளங்களிலும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் ஒருவர் தயவு செய்து தமிழைக் கொலை செய்யாதீர்கள். இலங்கையில் மில்லியன் கணக்கான மக்கள் பேசும் மொழி தமிழ் என்று குறிப்பிட்டுள்ளார்.
"சாதாரணமான கூகிள் மொழிபெயர்ப்பு மூலமே சரியான தமிழ் வார்த்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம்" எனவும் மற்றுமொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






