இந்திய தலைநகரில் பதற்றம் : முக்கிய இடங்களில் தீவிர சோதனை
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
செங்கோட்டை மெட்ரோ தொடருந்து நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாகவும் அதனால் மூன்று முதல் நான்கு வாகனங்கள் தீப்பிடித்து சேதமடைந்துள்ளன என்று டெல்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் வழங்கியுள்ளது.
டெல்லி முழுவதும் பாதுகாப்பு
டெல்லி செங்கோட்டை மெட்ரோ தொடருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.
Blast in New Delhi near Red Fort. One feared dead. See the impact of the explosion. pic.twitter.com/CH5y0KH3oJ
— Shubhangi Sharma (@ItsShubhangi) November 10, 2025
அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன.
இதையடுத்து தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |