அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5000 ரூபா சமுர்த்தி கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள இழுபறி
புதுவருடத்துக்காக அரசாங்கம் அவசரமாக அறிவித்த 30 லட்சம் மக்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு வழங்கலில் முரண்பாடுகளும், பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் நடைமுறையில் இருந்து கிராமசேவையாளர்கள் விலகியிருக்கின்றனர். அதேநேரம் குறித்த 30 லட்சம் பேரையும் இனங்காணுவதில் சமுர்த்தி அலுவலர்கள் தோல்விக்கண்டமை என்பன இந்த கொடுப்பனவுகள் தொடர்பில் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள சமுர்த்தி அலுவலர்களின் தொழிற்சங்க செயலாளர் சாமர மத்தும கலுகே,
கொடுப்பனவுகளை வழங்கப்போவதாக அரசாங்கம் ஏப்ரல் 10 ஆம் திகதி அறிவித்தபோதும் 12 ஆம் திகதியன்று அரச வர்த்தக விடுமுறையை அறிவித்தது.எனவே இந்த விடயத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமுர்த்தி உதவிப்பெறும் பயனாளிகள் மத்தியில் குறைந்த வருமானம் பெறுவோரை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. இதன்போது பொதுமக்கள் மத்தியில் இருந்து தமக்கு பாரிய அழுத்தங்கள் காட்டப்பட்டதாகவும் சமுர்த்தி அலுவலர்களின் தொழிற்சங்க செயலாளர் சாமர மத்தும கலுகே தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam