தமிழ் - சிங்கள மொழி கற்கை குறித்து கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை
ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ் மாணவர்கள் சிங்களத்தை இரண்டாவது மொழியாகவும் கற்க வேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (23.05.2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டார்.
முன்னோடித் திட்டம்
அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்க வேண்டும்.
அதேவேளை, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக கற்க வேண்டும்.
இதற்கமைய, ஆசிரியர்களுக்கு குறித்த மொழிகளைக் கற்பிக்க பயிற்சி அளிக்கப்படும் வரை இந்தத் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
