தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அமெரிக்க தூதர் ஜூலி சங்கிற்கும் இடையே சந்திப்பு

Colombo Mano Ganeshan Sri Lanka Julie Chung
By Harrish Jun 28, 2024 09:17 PM GMT
Report

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங் தலைமையிலான குழுவினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் மலையக சிவில் சமூக தூதுக்குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்று(28.06.2024) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

மொரவெவ முதலிக்குளம் வித்தியாலயத்திற்கு இம்ரான் எம்.பி கள விஜயம்

மொரவெவ முதலிக்குளம் வித்தியாலயத்திற்கு இம்ரான் எம்.பி கள விஜயம்


எழுத்து மூலமான ஆவணம்

இதன்போது, இலங்கையின் 12 மாவட்டங்களில் பரந்து வாழும் மலையக மக்களை, இந்நாட்டில் முழுமையான குடி உரிமை கொண்ட மக்களாக முறை மாற்றம் பெரும் நோக்கில், மலையக சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புடன் தமிழ் முற்போக்கு கூட்டணி, நாட்டில் அடுத்து வரும் அரசியல் மாற்றங்களை ஒட்டி வகுத்து வரும் வரை - பாதை (Road Map) எழுத்து மூலமான ஆவணம் ஒன்று அமெரிக்க தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணத்தில் வாழ்வாதார காணி, வதிவிட காணி, கல்வி, தொழில் பயிற்சி, நில சார்பற்ற சமூக சபை ஆகிய முன்னுரிமை விடயங்கள் பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தினக்கூலி தொழிலாளர்கள், பெருந்தோட்ட துறையில் பங்காளர்களாக முறை மாற்றம் பெறல், பெருந்தோட்ட துறையில் வாழ்கின்ற அனைத்து நிலமற்ற குடும்பங்களுக்கு வதிவிட காணி வழங்கள், கல்வி துறை தொடர்பில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில் நுட்பம் ஆகிய பாடங்களுங்கான விசேட ஆசிரியர் பயிற்சி கல்லூரி அமைத்தல், மலையக பெண்களுக்கான தாதியர் பயிற்சி கல்லூரி அமைத்தல் மற்றும் உலகளாவிய நாடுகளில் பரந்து வாழும் சிறுபான்மை இனத்தவர் மத்தியில் அமைய பெற்றுள்ள நில சார்பற்ற சமூக சபைகள் பற்றிய அனுபவங்களை பகிர்த்து கொள்ளல் ஆகியவை பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன.

தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை

இத்தகைய நிறுவனங்களை அமைப்பது, அவை தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது, அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது ஆகிய பொறுப்புகளை மக்கள் ஆணையுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுக்கும் என கூறியுள்ளது.

அமெரிக்க உட்பட சர்வதேச சமூக நண்பர்கள் இவற்றுக்கான தொழில் நுட்ப உதவிகள், அபிவிருத்தி உதவிகள் ஆகியவற்றை வழங்க முன் வர வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி கோரியுள்ளதுடன் இந்த கோரிக்கைகளை சாதகமாக பரிசீலிக்க அமெரிக்க தூதுவர் தலைமையிலான குழுவினர் உறுதி அளித்துள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அமெரிக்க தூதர் ஜூலி சங்கிற்கும் இடையே சந்திப்பு | Tamil Progressive Alliance Met Julie Chung

மேலும், மலையக மக்கள் இலங்கையில் மிகவும் பின் தங்கிய பிரிவினாரக இருப்பதை தாம் ஏற்று கொள்வதாகவும், அவர்களுக்கு விசேட ஒதுக்கீட்டு திட்டங்கள் தேவை என்பதை தம் அறிந்துள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, அமெரிக்க அரசின் சார்பில் மலையக மக்களின் நலவுரிமைகள் தொடர்பில் முன்னெடுக்க படுகின்ற வேலை திட்டங்கள் தொடர்பிலும் விளக்கி கூறி அது தொடர்பான எழுத்து மூலமான ஆவணம் ஒன்றையும் ஜூலி சாங் கையளித்துள்ளார். 

இந்த கலந்துரையாடலை மென் மேலும் தொடர தான் விரும்புவதாகவும், மலையக மக்களுக்கு இன்னமும் உதவிடும் சந்தர்ப்பங்களை எதிர் நோக்க அமெரிக்க அரசு விரும்புகிறது என அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அமெரிக்க தூதர் ஜூலி சங்கிற்கும் இடையே சந்திப்பு | Tamil Progressive Alliance Met Julie Chung

இந்நிலையில், மலையக மக்கள் இந்நாட்டில் முழுமையான குடி உரிமை கொண்ட மக்களாக முறை மாற்றம் பெரும் நோக்கில் தமிழ் முற்போக்கு கூட்டணியால் முன் வைக்கப்பட்ட ஆவணத்தை மேலும் செழுமை படுத்தி, அரசியல் பிரதிநிதிகளும், சிவில் சமூக உறுப்பினர்களும் இணைந்து சர்வ அம்சங்களும் அடங்கிய காத்திரமான அறிக்கையை அமெரிக்க தரப்பினரிடம் கையளிப்பது என்றும், பின்னர் அதன் அடிபடையில் விரிவான நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் மற்றும் தமுகூ/ஜமமு களுத்துறை மாவட்ட அமைப்பாளர் அன்டன் ஜெயசீலன் மற்றும் சிவில் சமூகம் சார்பில் பெ. முத்துலிங்கம், பேராசிரியர் மற்றும் மமமு பொது செயலாளர் விஜயசந்திரன், பேராசிரியர் சந்திரபோஸ், பேராசிரியர் ரமேஷ் ராமசாமி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

அமெரிக்க தரப்பில், தூதுவருடன் அரசியல் அலுவலர் அடம் மிசெலோ, யூஎஸ்எய்ட் வேலை திட்ட முகாமை விசேட அலுவலர்கள் ஜனக விஜயசிறி, ரெஹானா கட்டிலன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

யாழில் கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது

யாழில் கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது

டிரம்ப்பிடம் திணறிய பைடன் : அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்

டிரம்ப்பிடம் திணறிய பைடன் : அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US