சிறீதரனின் அழைப்பை ஏற்ற மனோ கணேசன்
கிளிநொச்சியில் (Kilinochchi) நடைபெறவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தமிழர் ஐக்கிய மே தின ஊர்வலத்தில் சிறப்பு பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) கலந்து கொள்ளவுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அழைப்பை ஏற்று அவர் மேதின நிகழ்வில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மனோ கணேசன் ஊடகங்களிடம் கூறுகையில்,
"மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள நமது கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை கொழும்பில் நடைபெறும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மே தின விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன்.
மே தின நிகழ்வுகள்
அதேவேளை, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வாழும் நமது கட்சி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களை தலவாக்கலையில் நடைபெறும் மே தின கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன்.
மேலும், கிளிநொச்சி மற்றும் வன்னி உட்பட வடமாகாணத்தில் வாழ்கின்ற நமது கட்சி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களை கிளிநொச்சியில் நடைபெறும் தமிழர் ஐக்கிய மே தின ஊர்வலத்தில் மற்றும் தமிழ் தேசிய மே தனி விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தமிழ் தேசிய மே தின விழாவில் கூட்டணியின் பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன் கொழும்பில் நடைபெறும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மே தின விழாவில் பிரதிநிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும், கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் தலவாக்கலையில் நடைபெறும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
