தமிழர்களின் பூஜையை குழப்பிய பௌத்த தேரர் - பதற்றமடைந்த குருந்தூர் மலை(Video)
குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் இன்றையதினம்(18.08.2023)பொங்கல் வழிபாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்ட நிலையில் நேற்றையதினமே (17.08.2023) குறித்த பகுதிக்கு சுமார் 300 வரையான சிங்கள மக்கள் சென்றிருந்தனர்.
இதேவேளை நூற்றுக்கணக்கான பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், 3 பேருந்துகள் மற்றும் 2 ரக் வாகனங்கள் உட்பட பலர் குருந்தூர் மலை நோக்கி படையெடுத்திருந்தமையை எமது லங்காசிறி ஊடகவியலாளர்கள் காணொளியாக பதிவு செய்திருந்தனர்.
இதேவேளை பௌத்த விகாரையில் இடம்பெற்ற வழிபாடுகளில் குறித்த விகாரை மற்றும் வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமாக விகாரை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் தலைமையிலான 29 தேரர்கள் மற்றும் சுமார் 300 பேர் வரையிலான மக்கள் பெரும்பான்மை தரப்பில் இருந்து கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், சூழலில் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர் தரப்புக்கும் பெரும்பான்மை சமூகத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
மேலும் இந்த சம்பவத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு பொங்கல் விழாவிற்கும், தமிழர் தரப்பிற்கும் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குருந்தூர் மலையில் இன்றையதினம் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள கீழே உள்ள காணொளியை பார்வையிடுங்கள்...




