யாரை ஏமாற்ற முனைகின்றார் சாணக்கியன்! தர்மலிங்கம் சுரேஸ் கேள்வி
2015ம் ஆண்டுக்கு முன்பாக சுதந்திரக்கட்சியுடன் இருந்து ஒட்டி உறவாடி 2015ம் ஆண்டு தேர்தலின் மூலம் தமிழ் தேசிய உடையைப் போட்டுக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் யாரை ஏமாற்ற முனைகின்றார் என்பதை உணர வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின் போதே இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சிக்கு இணக்கம்
தேர்தல் விஞ்ஞாபனத்தில் ''சமஸ்டி, வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணயம், தமிழ் மக்களுடைய இறையான்மை'' போன்ற கருத்துக்களை தெரிவித்து தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட்டு இன்று அவர் ஒற்றையாட்சிக்குள் இணக்கத்தை தெரிவித்து மறைமுகமாக இவ்வளவு காலமும் செயற்பட்டு வந்தவர்கள்.
இப்போது டிசம்பர் 13 ம் திகதி ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது ''காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள்'' என எங்களுக்கு தெரியும், அதேவேளை 13 திருத்த சட்டத்தையும் மாகாணசபை முறைமையையும் நீங்கள் நடைமுறைப்படுத்தினால் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்படும் என்ற கருத்தை முன்வைத்து கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்காது ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோராமை
பேச்சுவார்த்தையின் போது காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கான நீதியைக் கோராமை மூலமாக மக்களை ஏமாற்றியிருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பா? அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணியா? என்பதை மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ''என்ன அரசியல் இலக்கு என தெரியாமல் மக்கள் மத்தியிலே அரசியல் செய்துவருவதாக'' நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்த கருத்திற்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மக்களால் துரத்தியடிக்கப்பட்டார்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சரியான நிலைப்பாட்டுடன் பயணிக்கும் இந்த
சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிழையான அரசியலை முன்னெடுப்பதன் காரணமாக
சுமந்திரனுடன் கனடாவிற்கு சென்றிருந்த போது சாணக்கியன் மக்களால்
துரத்தியடிக்கப்பட்டார், இதனை நீங்கள் மறந்து விடக்கூடாது என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல 2017 ம் ஆண்டு தமிழ் மக்களின் அபிலாiஷகள் என்ன என்பதை சர்வதேச
சமூகத்திற்கு காட்டுவதற்கு நாங்கள் எழுக தமிழை செய்து காட்டினோம் அப்போது
மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடிய பங்களிப்பை எங்கள் கட்சி செய்திருந்தது
அப்போது களுவாஞ்சிக்குடி பகுதியிலே இராசமாணிக்கம் மண்டபத்துக்கு முன்பதாக
எங்களுடைய ஊர்தி வருகின்ற போது சிவப்பு மஞ்சல் கொடியை கண்டு நீங்கள்
அங்கிருந்து ஓடிநீர்கள் தமிழன் என அடையாளப்படுத்த வெக்கப்பட்டீர்களா? அல்லது
அடையாளப்படுத்த நீங்கள் விரும்பவில்லையா? கடுமையாகச் சாடியுள்ளார்.

மக்களின் உரிமை சார்ந்து
வருகின்ற தேர்தலில் தமிழ் மக்கள் எங்களுக்கு சரியான பாடத்தினை கற்பிப்பார்கள். நாடாளுமன்றத்தில் எதனையும் கூறலாம் கத்தலாம். ஆனால் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் உரிமை சார்ந்து எதனையும் கதைக்கவில்லை எனவும் இதன் போது அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan