இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த தமிழ் பிரதிநிதிகள்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் (Ajit Doval) இலங்கையின் தமிழ் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு, இன்றையதினம் (29.08.2024) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
நினைவு சின்னம்
இந்தச் சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்தியாவிற்குமிடையிலான உறவை வலுப்படுத்துதல் மற்றும் சமூக பொருளாதார விடயங்கள் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam