ராஜபக்சக்களுக்கு எதிராக வழங்கிய அதிரடி தீர்ப்பு! உண்மையை வெளிப்படுத்திய சாள்ஸ் (Video)
பயங்கரவாத தடைச்சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு சார்ள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நான் 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த போது, 2009ஆம் ஆண்டு யுத்தம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 217 அரசியல் கைதிகள் சிறையில் இருந்தார்கள்.
கருணை அடிப்படையில் விடுதலை
ஆனால், இப்போது பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில், 13 பேர் தான் 15 வருடங்களுக்கு மேலாகவும் சிறையில் உள்ளனர்.
ஏனைய அனைவரும் விடுதலை செய்யப்பட்டமைக்கு நான் இந்நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஆனாலும், எஞ்சிய பதின்மூன்று பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என நான் ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கேட்டு கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 மணி நேரம் முன்

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
