கனடாவில் தமிழ் பொலிஸ் அதிகாரிக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டு
கனடாவில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றிய தமிழர் ஒருவர் குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதியின்றி கணினியைப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கிவியன் கேதீஸ்வரன் என்ற அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
யோர்க் பிராந்திய பொலிஸ் அதிகாரியான கிவியன் கேதீஸ்வரன், கணினியை அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், நம்பிக்கைத் துரோகம் செய்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
குற்றவியல் குற்றச்சாட்டு
கணினியை அனுமதியின்றி பயன்படுத்தியது, ஒரு அரசு அதிகாரியின் நம்பிக்கையை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

எனினும் நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri