அநுர வாக்குறுதி மீதான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு - சிங்கள சமூகம் தலைசாய்க்குமா..!
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை மற்றும் அவர்கள் மீது செலுத்தப்படும் பயங்கரவாதம் குறித்து தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கினைப்பின் கீழ் நடந்த கலந்துரையாடல் என்னென்ன தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்பது குறித்து சட்டத்தரணி ம. யூட் டினேஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அநுர ஆட்சிக்கு வரும் முன்னர், மக்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றும் புதியதொரு அசியலமைப்பு கொண்டு வருவதாக கூறினார். ஆனால் இதுவரையில் அவர்கள் அதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், புலம்பெயர் தமிழர்களின் கொந்தளிப்பிற்காக நாங்கள் எங்களுடைய கோரிக்கைகளை குறைத்துக் கொள்ளவும் முடியாது.
அதே சமயம், தமிழ் மக்கள் விரும்பும் சமஷ்டி ஆட்சி முறைமை தான் வேண்டும் என்பதையும் நாங்கள் இதன் மூலம் தெளிவுப்படுத்த முயல்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சட்டத்தரணி வேறு என்னென்ன விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளார் என்பதை காணொளியில் பார்க்கலாம்.