தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கினால் தமிழர்களுக்கு கிடைக்க போவது என்ன..! பகிரங்க கேள்வி
தமிழ் பொது வேட்பாளரினை நாம் களமிறக்கினால் தமிழ் மக்களுக்கு கிடைக்க போவதுதான் என்ன என ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்கதான் (Ranil Wickremesinghe) நாட்டில் நிலவிய பொருளாதார பிரச்சினையை தற்போது ஓரளவுக்கு நிவர்த்தி செய்துள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இன்று (25.04.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நில அபகரிப்புக்கள்
மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளார். அதற்கு ஆதரவாக தான் நாம் மட்டக்களப்பில் மகளிர் மாநாட்டை கடந்தவாரம் நடத்தியிருந்தோம்.

ஏனைய தமிழ் கட்சிகள் பிரதான ஜனாதிபதி வேட்பாளருடன் ஒரு ஒப்பந்தத்தை செய்ய திட்டமிட்டுள்ளனர். எங்களுடைய மக்களுக்கு பாரிய பிரச்சினைகள் உண்டு. வடக்கு கிழக்கில் தொல்பொருள் என்ற போர்வையில் நில அபகரிப்புக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சஜித் பிரேமதாசவால் ஊழல் மிக்க அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாது என்று மொட்டு கட்சியினருக்கு தெரியும்.
இலங்கையின் பொருளாதாரம்
இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலம் வெளிநாட்டில் உள்ளவர்கள் அதிக டொலர்களைக் கொண்டு வருவதால் தற்போது நாட்டில் ஒரு ஸ்த்திரத்தன்மை நிலவுகின்றது.

மக்களினுடைய வாழ்க்கைச் செலவு தற்போது உயர்ந்து கொண்டே செல்கிறது. இருப்பினும் இலங்கையினுடைய பொருளாதாரம் தற்போது ஓரளவு சீர் செய்யப்பட்டுள்ளது.
மேலும், எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு மாத காலத்திற்குள் மைலத்தமடு மாதவனைப் பிரச்சினைகுத் தீர்வு காண்போம்” என்றும் முன்னாள் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam