75 ஆண்டுகளாக நீதிக்காக போராடும் தமிழ் மக்கள் - இந்தியாவிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை
இந்தியாவின் நலனுக்காக வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும், எனவே எங்களுடைய மக்களின் நிலையான இருப்பை தக்க வைப்பதற்கு தமிழ் மக்களின் சுயாட்சியை அங்கீகரித்து, தமிழ் மக்களுடைய அரசியல் உரிமையை பாதுகாக்க சமஷ்டி முறையை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முன்வரவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் நேற்று(26) காந்தி பூங்காவில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி சுடர் ஏற்றி எழுச்சியுடன் உணர்வு பூர்வமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம்
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தியாக தீபம் திலீபன் இளம் வயதில் மருத்துவ பட்டப்படிப்பை தொடர்ந்து கொண்ட காலத்தில், வடக்கு - கிழக்கில் தமிழர்கள் மீது சிங்களவர்கள் மேற்கொண்ட வன்முறைகள் அத்துமீறிய குடியேற்றம் போன்ற பல வன்முறைகளை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதை கண்டு கொண்டார்.

இவர் தமிழ் தேசம் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த இனத்துக்காக தமிழ் மக்களின் இருப்பு இந்த தீவில் நிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது மருத்துவ பட்டப்படிப்பை விட்டுவிட்டு தன்னை ஆயுத போராட்டத்தில் இணைத்துக் கொண்டு இந்தியாவிடம் 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து அகிம்சை போராட்டத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இந்த அகிம்சை போராட்டத்துக்கு இந்தியா முன் உதாரணமாக இருக்கும் என ஆயுத போராட்டத்தை விட்டு அகிம்சை போராட்டமாக சாகும் வரை உண்ணாவிரம் இருந்து, நல்லூர் ஆலய முன்றலில் தொடர்ந்து 12 நாட்கள் இருந்து உயிரிழந்தார்.
இந்தியா அந்த அகிம்சை போராட்டத்துக்கு மதிப்பளிக்காத இருந்துள்ளது. தமிழர்களை பொறுத்த மட்டில் தமிழர்கள் 76 வருடங்கள் அடக்கு முறைக்கு முற்பட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இலங்கைக்கு அண்மையில் இருக்கும் பெரும் வல்லரசான இந்தியாவை நம்பி தமிழ் மக்கள் இந்த தீவில் வாழ்கின்றனர் என வலியுறுத்தி வந்துள்ளோம் என்றார்.
அனோஜனின் விடுதலைக்காக காத்திருக்கும் இலங்கை மக்கள் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் கோரிக்கை
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri