சர்வகட்சி அரசாங்கத்தில் தமிழ் கட்சிகள் பங்கெடுப்பது அவசியமாகும்:டக்ளஸ் சுட்டிக்காட்டு
இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாக செயலாற்ற முன்வர வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதியின் அழைப்பு
நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள சர்வ கட்சி அரசாங்கமொன்றை அமைத்து முன்னோக்கி செல்வதன் ஊடாகவே சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான அழைப்பையும் சர்வ கட்சிகளுக்கும் எழுத்து மூலம் கடிதமாக அனுப்பி வைத்துள்ளார்.
ஜனாதிபதியின் அந்த அழைப்பை ஈ.பி.டி.பி வரவேற்பது மாத்திரமல்லாது அந்த நோக்கம் செயல் வடிவம் பெறுவதற்கான பங்களிப்பையும் செய்து வருகின்றது.
இந்த நிலையில் சர்வ கட்சியில் பங்கெடுப்பதும், சர்வ கட்சி அரசாங்கமொன்றின் எதிர்கால வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வேலைத் திட்டங்களையும் வகுத்துக்கொண்டு ஒரு தேசிய இனமாக நாமும் முன்னோக்கி செல்ல வேண்டும்.
தமிழ் அரசியல் கட்சிகளின் தீர்மானங்கள்
தமிழ் அரசியல் கட்சிகள் இலங்கையின் தற்போதைய அரசியல் செல்நெறியை சரியாக கணித்து நாம் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
சர்வ கட்சி அரசாங்கத்தை வரவேற்கும் அதேவேளை அதற்கு முரண்பாடான நிபந்தனைகளை விடுப்பதும், குழப்பத்தில் அரசியல் லாபம் தேடும் உள்நோக்கத்தோடும் தீர்மானங்களை எடுப்பார்களேயானால் அது மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்க செய்ததாகவே அமையும்.
எனவே ஏனைய தமிழ்க்கட்சிகள் தமது வழமையான எதிர்ப்பு அரசியல் எனும்
சமகாலத்திற்கு பொருத்தமற்ற அரசியல் போக்கை கைவிட்டு, ஈ.பி.டி.பியாகிய நாம்
தொடர்ந்தும் கூறிவரும் நடைமுறைச் சாத்தியமான அரசியல் வழிமுறைக்கு வருவது
காலத்தின் அவசியமாகும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதியைக் கடந்தார் ரணில்..! 3 மணி நேரம் முன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் மகனா இது? அடையாளம் தெரியாத அளவு வளர்ந்துட்டாரே...வைரலாகும் புகைப்படம் Manithan

அக்காள் - தங்கைகள் மூன்று பேரை தமிழ் பாரம்பரிய முறையில் மணந்த 3 பிரான்ஸ் இளைஞர்கள்! புகைப்படம் News Lankasri

விமானத்தில் ஆடைகளை கழற்றி வீசி, அச்சுறுத்திய இளம்பெண்! 3 குழந்தைகளின் தந்தை செய்த காரியம்... News Lankasri

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan
