"வல்வெட்டித்துறையில் அங்கஜன் - சுமந்திரன் ஆசீர்வாதத்தோடு தமிழ்த்தேசியம் அடித்து வீழ்த்தப்பட்டது"
வல்வெட்டித்துறையில் துரோகம் தற்காலிகமாக வெற்றியடைந்துள்ளது. எனினும், தமிழ் தேசியம் அங்கு மீள மலரும், வல்வெட்டித்துறையில் அங்கஜன், சுமந்திரனின் ஆசீர்வாதத்தோடு தமிழ்த்தேசியம் அடித்து வீழ்த்தப்பட்டது என தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நகர சபைத் தெரிவு தொிவு தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வசமிருந்த வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் கதிரை சுயேட்சைக்குழு வசம் சென்றுள்ளது. புதிய தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா ஒரு மேலதிக வாக்கினால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக பதவி வகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா, அண்மையில், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, தவிசாளர் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் இன்று நடைபெற்றது.
வல்வெட்டித்துறை நகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏழு உறுப்பினர்களில் அறுவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரு உறுப்பினர்களும்; வேட்பாளர் சதீஸிற்கு ஆதரவாகவும் சுயேட்சைக் குழு – 4 உறுப்பினர்களும் மற்றும் ஈபிடிபி 2 உறுப்பினர்களும் சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றின் ஒவ்வொரு உறுப்பினரும் சுயேட்சைக்குழு வேட்பாளர் செல்வேந்திராவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கூட்டமைப்பின் துணை தவிசாளரும் சுயேட்சை குழுவிற்கு வாக்களிக்க நகரசபையைக் கூட்டமைப்பு இழந்துள்ளது, இச் சம்பவத்தின் பின்னணியில் சுமந்திரன் நேரடியாக செயற்பட்டதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam