நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டம் சார்பில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் சிறீபிரசாந் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக சந்திபின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“தமிழ் தேசிய மக்கள் முண்ணனி இம்முறை வடக்கு கிழக்கில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் சமூக சிவில் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து ஒற்றுமையாக செயற்படவுள்ளோம்.
அரசியல் கலாசாரம்
தமிழ் மக்களை பலர் வயது முதிர்ந்த நிலையில் மாற்றியுள்ளனர். பொதுக் கட்டமைப்பிலும் கூட்டமைப்பில் போட்டியிட மாட்டோம்.

தமிழ் தேசியத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக மக்களை ஒற்றுமைப்படுத்தி இந்த தேர்தலில் முன்னிற்போம் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்” என்றார்.
இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் க. குகன் தெரிவிக்கையில்,
“ஒற்றுமையாக செயற்படுவதற்கு கொள்கையை மையப்படுத்தி செயற்படுத்தி 15 வருடங்களாக வடக்கு கிழக்கில் செயற்படுகிறோம்.

கொள்கைகளுக்காக பாடுபடுகின்ற அரசியல் கலாசாரம் திருகோணமலையில் உருவாக வேண்டும். எதிர்கால நாடாளுமன்ற தேர்தலில் இதன் மூலம் சிவில் செயற்பாட்டாளர்களையும் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri