எம்.கே.சிவாஜிலிங்கம் பதவிநீக்கம்! உண்மை என்று கூறும் கட்சியின் அமைப்பாளர்
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டது உண்மை என தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் தெரிவித்துள்ளார்.
இவ் விடயத்தை கட்சியின் தலைவர் சிறிகாந்தாவும் சிவாஜிலிங்கமும் வெளிப்படையாக உளச்சான்றுடன் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (08.08.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரிக்கை

ஜனாதிபதி ரணில் இந்தியா பயணிப்பதற்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர்,13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அந்த சமயத்தில் இந்தியாவில் தங்கியிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், அதற்கு முரணான முற்றிலும் நேர்மாறான கோரிக்கையை வலியுறுத்தி மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
அவரது கடிதத்தில் சர்வஜன வாக்கெடுப்பை கோரியிருந்தார்.
இந்நிலையில் கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கத்தை விலகுமாறு கட்சி தலைமையால் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனை ஏனைய தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 19 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam