நானும் தமிழ் தேசியத்தின் ஒருவர்தான்: இஸ்லாமிய மதகுரு வெளிப்படை
நான் முஸ்லிம் மதத் தலைவராக இருந்தாலும் நானும் தமிழ் தேசியத்தின் ஒருவர்தான் என சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த மௌலவி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நான் தமிழ் தேசியத்தின் ஒருவன் என்பதையிட்டு சந்தோசமடைகின்றேன் எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தருடைய நினைவேந்தல் நிகழ்வு நேற்று (06.07.20204) இலங்கை தமிழரசுக்கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச குழுவின் தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் களுவாஞ்சிகுடி பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கொடுக்கக் கூடாது என்ற எண்ணம்
மேலும் “முஸ்லிம் சமூகத்தில் ஒரு முஸ்லிம் அல்லாதவனின் காணி இருந்தாலும் அதனை கொடுத்துவிடு என நபிகள் நாயகம் கூறியிருக்கின்றார்.

யாராக இருந்தாலும் தமது மனங்களில் உரிமையை எப்பொழுதும் கொடுக்கக்கூடாது என்ற சிந்தனை இருக்கவே கூடாது.
இந்த நாட்டிலே சில கயவர்களின் மனங்களில் பதிந்ததுதான் கொடுக்கக் கூடாது என்ற எண்ணம்.
இந்நிலையில்தான் தனக்கென பெரிய பதவிகள் தேடி வந்தபோது அதனைப் பெறாமல் சென்றுள்ளார் சம்மந்தன்.
பல்லின சமூகம்
அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்கின்றேன். நாட்டிலே நான்கு மதங்களை வைத்திருக்கின்ற பல்லின சமூகம் நாம்.
ஆனால் நாம் இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கின்றோம். சம்மந்தன் இறந்து விட்டார் என என்னுடைய மூத்த மௌலவி ஒருவர் மிகவும் கவலையோடு தெரிவித்தார்.

முஸ்லிம் விவகாரங்கள் பற்றிப் பேசுகின்றபோது மிகவும் அமைதியாக சமூகம் கேட்டுக் கொண்டிருந்தது.
அந்த அளவிற்கு மரியதை நிறைந்த முழுமையான தலைமைதான் அவர்.
இன்னொருவரின் உரிமைக்காக பாடுபட்டு இறுதியில் உலகத்தை விட்டுப் பிரிகின்றாரோ அவர்தான் மிக மிக சிறந்தவர்” என மௌலவி கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam