தமிழக அரசாங்கத்தின் செயற்பாடு, ஒரு புதிய ஆரம்பம்! இலங்கையின் முன்னணி செய்தித்தாள்!
இலங்கை மக்கள் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ள நிலையில் தமிழக அரசாங்கத்தின் செயற்பாட்டை இலங்கையின் முன்னணி ஆங்கில இதழின் ஆசிரியர் தலையங்கம் பாராட்டியுள்ளது.
புதிய ஆரம்பம்
நெருக்கமான உறவைக்கொண்ட வடமாகாணத்துக்கு மாத்திரம் தமது உதவியை மட்டுப்படுததாமல், இலங்கையின் அனைத்து மக்களுக்கும் தமிழகத்தின் உதவி கிடைப்பது பாராட்டுக்குரியது.
எனவே இது ஒரு புதிய ஆரம்பமாக இருக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளது.
தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் அரசியல்வாதிகள், குறிப்பாக கொழும்பிலும் மத்திய மலைநாட்டிலும் உள்ளவர்கள், தமிழகத்தின் உதவிகள், இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டமையும் பாராட்டுக்குரிய நிலைப்பாடாகும்.
கசப்பான அனுபவம்
இந்திய அரசாங்கம், ஒரு காலத்தில் துணிச்சலாக வடக்கில் உணவுப் பொருட்களை வானுார்திகளில் இறக்கிய காலத்தின் கசப்பான நினைவுகளைத் துடைப்பது எளிதல்ல.
இதுவே இலங்கையில் பெரும்பான்மையினரிடையே இந்திய விரோதத்தை ஏற்படுத்தியதாக குறித்த செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் தமிழக அரசாங்கத்தின் நல்லெண்ண நடவடிக்கையை சந்தேகிப்பது பொருந்தாது என்ற போதும், பட்டினியால் வாடும் வட இலங்கை சகோதரர்களின் கடற்றொழில் வாழ்வாதாரத்தை காக்கும் முகமாக கடற்பரப்பில் சட்டவிரோதமாக வேட்டையாடாமல் தங்கள் மீனவர்களை கட்டுப்படுத்துவதை தமிழக அரசாங்கம் உறுதிச்செய்யவேண்டும் என்றும் செய்தித்தாளின் ஆசிரியர் தலையங்கத்தில் கோரப்பட்டுள்ளது.





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri

ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
