தமிழக அரசின் இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள்: முல்லைத்தீவில் பகிந்தளிப்பு (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இந்திய தமிழக அரசின் உதவியில் வழங்கப்படும் இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினை வந்தடைந்துள்ளது.
தமிழக அரசினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட நிவாரண பொதிகள் இரண்டு கனரக வானங்களில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினை வந்தடைந்துள்ளதுடன் அதனை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விலநாதன் பெறுப்பேற்றுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்.
'தமிழக முதலமைச்சரின் அனுசரணையுடன் இரண்டாம் கட்ட அரிசி வந்துள்ளது. 65 ஆயிரம் கிலோ அரிசி கிடைத்துள்ளது. இதனை 6500 குடும்பங்களுக்கு தலா பத்து கிலோ வீதம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
வறுமைப்பட்ட குடும்பங்கள்
மிகவும் வறுமைப்பட்ட குடும்பங்களை தெரிவு செய்து வழங்க நடவடிக்கை முன்னெடுத்துள்ளோம். முதற்கட்ட 24140 குடும்பங்களுக்கு அரிசியும் 1500 குடும்பங்களுக்கு பால்மாவும் வழங்கியுள்ளோம்.
வறுமை கோட்டின் கீழ் இரண்டாவது மாவட்டமாக காணப்பபட்டுள்ளமையினால் வறுமைகுட்பட்ட மக்களை தெரிவு செய்து வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு 2004 குடும்பங்களுக்கும், துணுக்காய் பிரதேசத்திற்கு 572 குடும்பங்களுக்கும், மாந்தை கிழக்கில் 417 குடும்பங்களுக்கும், ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் 1023 குடும்பங்களுக்கும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1962 குடும்பங்களுக்கும், வெலிஓயா பிரதேசத்தில் 522 குடும்பங்களுக்கும் இந்த அரிசி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக' தெரிவித்துள்ளார்.
May you like this video
சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

அழியப்போகும் மனிதர்கள்! விரைவில் 3ம் உலகப்போர்: பாபா வங்காவைத் தொடர்ந்து பெண் ஜோதிடர் பகீர் Manithan

ரஷ்யாவில் வளர்ப்பு மகனை மணந்து உலகளவில் வைரலான பெண்! தற்போது வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு News Lankasri

தளபதி விஜய் வைத்த பார்ட்டியில் ஷங்கர், விக்ரம், உதயநிதி ஸ்டாலின்! சர்ச்சைக்கு உள்ளான புகைப்படம் Cineulagam
