முன்னர் போர் ஏதிலிகள்! தற்போது பொருளாதார ஏதிலிகள்! தமிழகத்துக்கு தப்பிச்செல்லும் இலங்கை தமிழர்கள்! (Video)

refugees crisis Srilankan Economic Tamilnadu
By Amal Mar 23, 2022 02:38 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைய உள்ளதாகவும், எரிபொருள் தட்டுபாட்டால் வரமுடியாமல் அவதியுற்று வருவதாக தமிழகத்திற்கு அகதிகளாக சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு வரை 16 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர். மேலும் பலர் அகதிகளாக தனுஸ்கோடிக்கு வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கடல் பாதுகாப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய தகவல் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது பட்டிணிச்சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஸ்கோடிக்கு வவுனியாவிலிருந்து அகதிகளாய் இலங்கை மக்கள் சென்றுள்ளனர்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களான, குழந்தைகளுக்கான பால் பவுடர், அரிசி, பருப்பு, கோதுமை, மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுபாடு காரணமாக இலங்கையில் வாழும் மக்கள் தமிழகத்திற்கு அகதிகளாக செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந் நிலையில், திங்கட்க்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து தனது சொந்த பைபர் படகில் ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தனுஸ்கோடிக்கு சென்றுள்ளனர்.

நடுக்கடலில் படகின் இஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்தளித்த நிலையில் பல மணி நேர முயற்சிக்கு பின் இஞ்சின் சரி செய்து நேற்று செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்தை சென்றடைந்துள்ளனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள்,

இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தகாலங்களில் உறவுகளையும் உடமைகளையும் இழந்து உயிர் பிழைத்தால் போதும் என 1990 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாய் வந்து போர் முடிந்த பின் 2012ல் மீண்டும் இலங்கைக்கு புறப்படுச் சென்றோம்.

தற்போது உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு பயந்து குழந்தைகளோடு மீண்டும் இரண்டாவது முறையாக அகதிகளாக தனுஸ்கோடி வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

முதலாம் இணைப்பு

இலங்கையில் இருந்து தமிழர்கள் தமிழகத்துக்கு ஏதிலிகளாக செல்லும் நிலை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

நேற்று மாத்திரம் 16 பேர் தமிழகம் தனுஸ்கோடிக்கு சென்றநிலையில் அங்கு தடுத்துவைக்கப்பட்டனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாவர்.

முன்னர் இலங்கையில் போர்க் காரணமாக தப்பிச்சென்ற இலங்கை தமிழர்கள் தற்போது, பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்திய ஊடக தகவல்களின்படி, இலங்கை தேசத்தை விட்டு வெளியேறி தனுஸ்கோடி மணல் திட்டில் தரையிறக்கப்பட்டிருந்த மூன்று குழந்தைகள் உட்பட ஆறு இலங்கைத் தமிழர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்திய கடலோர காவல்படை வீரர்களால் மீட்கப்பட்டனர்.

இதேவேளை தனுஸ்கோடி அருகே உள்ள பாலம் என்ற இடத்தில் மேலும் 10 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் எரிவாயு கொள்கலனின் விலை (இலங்கை ரூபாய்) 1,900 இலிருந்து 4,000ரூபாவாக அதிகரித்துள்ளது மற்றும் அரிசியின் விலை கிலோ ஒன்று 130 இலிருந்து 230 ரூபாவாக உயர்ந்துள்ளது.

ஒரு முட்டையின் விலை 35 ரூபாய் என்று தமிழகத்துக்கு தப்பிச்சென்ற ஏதிலிகள் கூறியிருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னர் போர் ஏதிலிகள்! தற்போது பொருளாதார ஏதிலிகள்! தமிழகத்துக்கு தப்பிச்செல்லும் இலங்கை தமிழர்கள்! (Video) | Tamil Nadu Refugees Srilankan Economic

தொடர்புடைய செய்தி

இந்தியாவுக்கு அகதிகளாக சென்று அடைக்கலம் கோரியுள்ள இலங்கையர்கள் (VIDEO)

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US