இலங்கை வழிக்கு வராவிட்டால் வரிச் சலுகையை விலக்குங்கள்! தமிழரசுக் கட்சியினர் வலியுறுத்து

European Union M. A. Sumanthiran Shanakiyan Rasamanickam Government Of Sri Lanka ITAK
By Rakesh May 05, 2025 01:52 PM GMT
Report

ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை நிறைவேற்றும் கடப்பாட்டில் இலங்கை அரசு தொடர்ந்தும் தவறிழைக்குமானால் அதற்கு வழங்கி வரும் ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொள்ளலாம் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழுவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட கண்காணிப்புக் குழுவுக்கு இடையில் நேற்று(4) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்குத் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டு வரும் விசேட ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை அடுத்த ஆண்டில் முடிவடைய இருக்கும் சூழலில், அதை நீடிப்பதா என்பது குறித்து ஆராயவே ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் கொழும்பிற்கு வருகை தந்துள்ளனர்.

யாழ்.மாவட்டம்! உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான தகவல்கள்

யாழ்.மாவட்டம்! உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான தகவல்கள்

வரிச் சலுகை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல், இணையப் பாதுகாப்பு சட்டத்தை சீராக்குதல், நல்லாட்சி முறையைப் பேணுதல், பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்துதல், நியாயமான அதிகாரப் பகிர்வை முன்னெடுக்கும் விதத்திலான அரசமைப்பை உருவாக்குதல் என்பவை தொடர்பாக இலங்கை சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாதமை குறித்து இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியினர் சுட்டிக்காட்டினர். 

இலங்கை வழிக்கு வராவிட்டால் வரிச் சலுகையை விலக்குங்கள்! தமிழரசுக் கட்சியினர் வலியுறுத்து | Tamil Nadu Party Talks With Eu

இது தொடர்பில் சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டின் பிரஜைகள் என்ற முறையில், பொருளாதார ரீதியில் நாட்டை மேம்படுத்தும் நோக்கில் நாட்டுக்கான வரிச் சலுகைகளைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வந்தோம்.

அந்த வரிச்சலுகைகளை இலங்கை அரசுகள் பெற்றுக்கொண்ட போதிலும், கடைசியில் நாட்டைப் பொருளாதார வங்குரோத்திலேயே கொண்டு போய் நிறுத்தியுள்ளன. மறுபுறத்தில் இந்த வரிச்சலுகையைப் பெறுவதற்கான நிபந்தனைகளையும் அரசு நிறைவேற்றவில்லை.

தொடர்ந்து இவ்வாறு அரசு முறையற்ற விதத்தில் - பொறுப்பற்றுச் செயற்படும்போது வரிச்சலுகையைத் தொடர்ந்து வழங்குங்கள் என்று நாம் கோருவது நியாயமற்றது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது, பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்துவது, அதிகாரங்களை நீதி, நியாயமான முறையில் பகிர்வது, நல்லாட்சியைப் பேணுவது ஆகியவை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சர்வதேசத்துக்கும் தான் வழங்கிய உறுதிமொழிகளைத் தொடர்ந்து அரசு நிறைவேற்றவில்லை. உதாசீனப்படுத்தி வருகின்றது. இப்படி ஏமாற்றுகரமான முறையில் இலங்கை அரசு தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது.

சட்டவிரோத பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - உதவி தேர்தல் ஆணையாளர்

சட்டவிரோத பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - உதவி தேர்தல் ஆணையாளர்

தமிழருக்கு நீதி 

நீதியையும், நல்லாட்சியையும், மனித உரிமைகளையும் நிலைநாட்டும் தனது கடப்பாட்டை இலங்கை நிறைவு செய்வதற்கான நிபந்தனைகளைக் காலம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விதிக்க வேண்டும்.

இலங்கை வழிக்கு வராவிட்டால் வரிச் சலுகையை விலக்குங்கள்! தமிழரசுக் கட்சியினர் வலியுறுத்து | Tamil Nadu Party Talks With Eu

அந்த நிபந்தனைகளை இலங்கை அரசு நிறைவேற்றத் தவறினால் வரிச் சலுகையை விலக்கிக்கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அப்படியான நடவடிக்கையை நாங்கள் வரவேற்போம் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழருக்கு நீதி வழங்கப்பட வேண்டும், அதிகாரம் முறையான விதத்தில் பகிரப்பட வேண்டும் என்பவை தொடர்பில் இலங்கைக்குக் கடும் அழுத்தம் கொடுக்குமாறும்  ஐரோப்பிய ஒன்றியத்தைத் தமிழரசுக் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் இரா.சாணக்கியன், வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNELஇல் இணையுங்கள் JOIN NOW
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US