நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து சமஷ்டியை உருவாக்குவோம்...! தமிழரசுக்கட்சி வலியுறுத்து
இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் இன்று நடைபெற்ற நிலையில், கட்சியின் சார்பில் 10 முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய உழைப்பாளிகள் தினப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பிரகடனத்தில், அரசியல், பொருளாதாரம் மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரக் கோரிக்கைகள்
இதன்படி, சம்பள உயர்வு: பொருளாதாரச் சிக்கல், 'டித்வா' புயல் மற்றும் மேற்காசிய போர்ச் சூழலால் வீழ்ச்சியடைந்துள்ள ரூபாவின் பெறுமதியைக் கருத்திற்கொண்டு, நாளாந்தச் சம்பளம் பெறுவோரின் ஊதியம் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும்.

சுயதொழிலாளர் நிவாரணம்: உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும் சுயதொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
மின்சாரக் கட்டணம்: நிலக்கரி இறக்குமதி ஊழலால் ஏற்படும் மின்சாரக் கட்டண உயர்வை மக்களிடம் வசூலிக்காமல், அதற்குப் பொறுப்பான அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்தே அந்தப் பணத்தைப் பெற வேண்டும்.
அரசியல் - உரிமைசார் கோரிக்கைகள்
அரசியல் தீர்வு: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து, அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஷ்டி கட்டமைப்பிலான புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
தேர்தல்: நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும்.
கைதிகள் விடுதலை: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதுடன், எஞ்சியுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிப் பொறிமுறை உடனடியாக ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
நில விடுவிப்பு: வடக்கு, கிழக்கில் இராணுவம் மற்றும் தொல்பொருள், வனப்பாதுகாப்பு, மகாவலி ஆகிய திணைக்களங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
மேலும், புதிய அரசிலும் இடம்பெறும் ஊழல் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு பொதுச்சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது பிரகடனத்தில் வலியுறுத்தியுள்ளது.
மே தின நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் பசுமை பூங்கா வளாகத்தில் தொழில் சங்கங்களின் ஏற்பாட்டில் சிறப்புர மே தின நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலதிக தகவல்- தேவந்தன்
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தமிழரசுக்கட்சியினால் ஏற்பாடுசெய்யப்பட்ட மேதின நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட பட்டிப்பளையில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை மற்றும் பட்டிப்பளை கிளையின் ஏற்பாட்டிலும் பட்டிப்பளை கிளையின் தலைவருமான அ.கருணாகரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கொக்கட்டிச்சோலை சந்தியிலிருந்து மேதின ஊர்வலம் பட்டிப்பளை விளையாட்டு மைதானம் வரையில் சென்றது.
இந்த ஊர்வலத்தில் மேதினத்தினை குறிக்கும் வகையிலான பல்வேறு பதாகைகளை ஏந்தியவகையில் பேரணியானது மேதினம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்தது.
இதன்போது முச்சக்கர வண்டி சாரதிகள் அமைப்பு,விவசாய அமைப்பின் உறுப்பினர்கள் முச்சக்கர வண்டிகள்,உழவு இயந்திரங்களின் பேரணி மற்றும் மீனவர்கள் தமது படகுகளையும் அணிவகுப்பாக கொண்டு இந்த பேரணி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து குறித்த மைதானத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மேதின நிகழ்வுகள் நடைபெற்றன. இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிப்பளை கிளையின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன்,டாக்டர் இ.சிறிநாத்,க.கோடீஸ்வரன்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அமைப்புகளின் பிரகடன உரைகள் நடைபெற்றதுடன் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியினால் மேதின பிரகடன உரை நிகழ்த்தப்பட்டது.
இன்றைய நிகழ்வின்போது வழமைக்கு மாறாக பட்டிப்பளை,கொக்கட்டிச்சோலை பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் பெருமளவான பொலிஸாரும்
மேலதிக தகவல்- குமார்
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri