பரபரப்பிற்கு மத்தியில் நாளை கூடும் தமிழக சட்டசபை! ஆளுநரின் காலக்கெடுவை நெருங்கும் தவெக
தமிழக சட்டசபை நாளை கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அமைச்சர்களின் பதவியேற்புக்கான கோப்புகளில் கையெழுத்திட்ட நிலையில் நாளை (11) காலை 9.30 மணிக்கு பதவியேற்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்..! முதலமைச்சராக விஜய் பதவியேற்றதும் பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவுகள்
அமைச்சர்களின் பதவியேற்பு
மேலும் 12ஆம் திகதியன்று சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.

ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றதனைத் தொடர்ந்து 9 அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம்
என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டிகே பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கும் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

இந்நிலையில் நாளை ஏனைய எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13 ஆம் திகதிக்குள் சட்டசபையில் தவெக, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில், சட்டசபையில.தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் என கூறப்படுகிறது.
"ஜோசப் விஜய் என்னும் நான்.." நேரு உள்விளையாட்டு அரங்கில் குவியும் முக்கிய புள்ளிகள் - தயார்நிலையில் பலத்த பாதுகாப்பு வலயம்
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan