இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த தமிழக கடற்றொழிலாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு(Photo)
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 22 தமிழக கடற்தொழிலாளர்களை எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நெடுந்தீவு அருகே நேற்று முன்தினம்(21.06.2023) இரவு தமிழக கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 3 படகுகளை கைப்பற்றியதுடன் அதிலிருந்த 22 கடற்தொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவு

கைது செய்யப்பட்டவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் 22 தமிழக கடற்தொழிலாளர்களையும் நேற்று(22.06.2023) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து 22 கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan