தமிழரசுக்கட்சியின் தேர்தல் நியமனக்குழுவை அங்கீகரித்த அரசியல் குழு
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு நியமித்த தேர்தல் நியமனக்குழுவை கட்சியின் அரசியல் குழுவும் நேற்று வியாழக்கிழமை மாலை இணைய வழியில் கூடி அங்கீகரித்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தீர்மானிப்பதற்காகத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நியமித்த 11 பேர் கொண்ட தேர்தல் நியமனக்குழுவையே நேற்று அரசியல் குழுவும் அங்கீகரித்தது.
தேர்தல் நியமனக்குழு
இந்த 11 பேர் கொண்ட குழுவே வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்யவுள்ளது.
தேர்தல் நியமனக் குழுவில் மாவை சேனாதிராஜா, ப.சத்தியலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், ச.குகதாசன். சி.வி.கே.சிவஞானம், கி.துரைராஜசிங்கம், சேயோன், ரஞ்சினி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri