தமிழக முதல்வர் ஜனாதிபதி அநுரவிடம் விடுத்த வேண்டுகோள்
இலங்கை(Sri lanka) சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்பில் சாதகமாக பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம்(Anura Kumara Dissanayake) தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தற்போதைக்கு இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அநுரவிடம் வேண்டுகோள்
இந்நிலையில் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிப்பது குறித்து சாதமாக பரிசீலிக்குமாறு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுப்படும் இந்திய கடற்தொழிலாளர்கள் காரணமாக இலங்கை கடற்றொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதுடன், பொருளாதார ரீதியான இழப்புகளையும் எதிர்கொள்வதன் காரணமாகவே இலங்கைக் கடற்படையினர் அவர்களைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |