தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை! அண்ணாமலை கவலை
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்து மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கவலை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் பேதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்து மக்கள் தொகையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தமிழர்களின் கலாசாரம்
இந்த போக்கு எதிர்காலத்தில் தமிழர்களின் கலாசாரத்திற்கு பாரிய சிக்கலாக அமையும் என்பதால் கவலை அளிக்கிறது.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தனித்துவமான கலாசாரத்தையும் அடையாளத்தையும் பேணி வருகின்றன.
அண்மைக்காலமாக இந்த பகுதிகளில் பௌத்த தொல்பொருள் இடங்கள் தோன்றியமை ஈழத் தமிழர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பது நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்.”என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |