மன்னார் மாந்தை மக்களுக்கு தமிழக உதவிகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்(Photo)
தமிழ் நாட்டு மக்களால் அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள உலர் உணவு பொருட்களை வழங்கும் நடவடிக்கை பல பகுதிகளில் நடைப்பெறுகின்றது.
இந்த உலர் உணவு பொருட்கள் மாந்தை மேற்கு கிராம மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.
உலர் உணவு பொருட்கள் வழங்கும் வைபவம்
இந்திய தமிழ் நாட்டு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு மக்களுக்கு இன்று (31) காலை வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2200 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக அடம்பன் மற்றும் நெடுங்கண்டல் கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 116 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
எதிர்கால நடவடிக்கை
நெடுங்கண்டல் கிராம அலுவலகர் பிரிவில் வைத்து முதல் கட்டமாக பிரதேச செயலாளர் அரவிந்த ராஜ் தலைமையில் இந்த உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது உதவி பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் நிகழ்வில் கலந்துக்கொண்டு உலர் உணவு பொருட்களை இணைந்து வழங்கி வைத்தனர்.
தொடர்ச்சியாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஏனைய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



