தமிழ் தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு
இலங்கையை மீட்டெடுக்க தமிழ் தலைவர்களும் இணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அநுராதபுரம் கோல்டன் மெங்கோ மண்டபத்தில் நடைபெற்ற அநுராதபுரம் மாவட்ட அபிவிருத்தி சபையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இணைந்து செயற்பட அழைப்பு
அவர் மேலும் கூறுகையில், “இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டுள்ளோம். சுதந்திரம் பெற்ற பிறகுதான் பிரிந்தோம் இப்போது நமக்கு முன்னால் ஒரு கடினமான காலம் உள்ளது.
நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும், கடந்த காலங்களில் சுதந்திரம் பெற இடதுசாரித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து காணப்பட்டுள்ளனர். அதில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற தமிழ் தலைவர்களும் இருந்தனர்.
மேலும் அவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவே செயற்பட்டனர், நாம் அனைவரும் மீண்டும் இணைந்து செயற்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.
May you like this Video