பிஜீ தீவுகளில் தமிழ் மொழியை மேம்படுத்த இந்திய உதவி
பிஜீ தீவுகளில் மொழியை மேம்படுத்தும் திட்டமொன்றுக்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சு பிஜீ தீவுகளின் கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
விடுக்கப்பட்ட கோரிக்கை
பிஜீ தீவுகளுக்கு இரண்டு தமிழ் ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தமிழ் சங்க பாடசாலைகளில் மாணவர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கப்பட உள்ளது.

தமிழ் கலாசாரத்தையும் மொழியையும் பிஜீ தீவுகள் வாழ் தென்னிந்திய புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இவ்வாறு இந்திய அரசாங்கம் பிஜீ தீவுகளில் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கடந்த ஆண்டு பிஜீ தீவுகளுக்கு விஜயம் செய்திருந்த போது விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த தமிழ் மொழி கற்பிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan