சீனாவினால் புறந்தள்ளபட்ட தமிழ்மொழி! இலங்கைக்குள் பரப்பரப்பான விவாதங்கள்

Srilanka China
By Steephen May 28, 2021 08:24 PM GMT
Report

இலங்கை அரசாங்கத்தின் இரண்டு திட்டங்களில் தமிழ் மொழியை புறந்தள்ளி விட்டு சீனாவின் மெண்டரின் மொழியை உள்ளடக்கி இரண்டு பெயர் பலகைகள் வைக்கப்பட்ட சம்பவங்களின் பின்னர் இலங்கைக்குள் மிகப் பெரிய விவாதங்கள் நடந்து வருகின்றன.

சீனா தனது கலாசார ஆதிபத்தியத்தை இலங்கை மக்கள் மீது திணிக்க ஆரம்பித்துள்ளதா என மக்கள் விவாதித்து வருகின்றனர். கடந்த வாரம் இலங்கையின் சட்டமா அதிபராக இருந்த தப்புல டி லிவேரா, சிங்களம், ஆங்கிலம், மெண்டரின் மொழிகளில் எழுதப்பட்ட பெயர் பலகையை திறந்து வைத்தார்.

தமிழ் மொழியை உள்ளடக்காது மெண்டரின் மொழியை பயன்படுத்தியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை பயன்படுத்தும் நாட்டின் அரசகரும மொழி கொள்கைக்கு முரணாது. சீனா, இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இலத்திரனியல் நூலகத்தை அன்பளிப்பு செய்த பின்னர் இந்த கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

இது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த விமர்சனங்களை அடுத்து பெயர் பலகை நீக்கப்பட்டது. எனினும் கருத்து தெரிவிக்க சட்டமா அதிபர் திணைக்களம் மறுத்தது. இந்த விமர்சனத்தை சரி செய்வதற்காக இலங்கைக்கான சீனத் தூதரகம் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவித்திருந்தது.

இலத்திரனியல் நூலக கட்டடத்தின் தளத்தில் ஒரு இடைக்கால அடையாள பலகையில் மும்மொழி விதிகளுக்கு கட்டுப்பாடாததை நாங்கள் கவனித்தோம். அதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது எனக் கூறியிருந்தது.

அத்துடன் இலங்கையில் உள்ள மூன்று அதிகாரபூர்வமொழியை நாங்கள் மதிக்கின்றோம். சீன நிறுவனங்களை இதனை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் சீனத் தூதரகம் தனது டுவிட்டரில் கூறியிருந்தது.

மேலும் சீன மொழி அடங்கிய ஏனைய கட்டமைப்புகளின் படங்களும் பகிர்ந்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதேபோன்று கடந்த வாரம் மற்றுமொரு சர்ச்சையும் ஏற்பட்டது. சீனாவின் உதவியுடன் கொழும்பு துறைமுக நகரில் உருவாக்கப்பட்டு வரும் மத்திய பூங்காவில் தமிழுக்கு பதிலாக மெண்டரின் மொழி பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்த செய்தி தமிழ் குழுக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய பின்னர் கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு நிறுவனம் மும்மொழியிலான கடித தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இந்த திட்டம் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் ஒப்பந்தகார்கள் ஊழியர்கள் அறிந்துக்கொள்வதற்காக கையெழுத்தில் இந்த பெயர் பலகையை வைத்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் தற்காலிக பெயர் பலகைகளை மூன்று உத்தியோகபூர்வ மொழிகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

துறைமுக நகரில் தொழில் புரியும் பெரும்பாலான ஊழியர்கள் உள்ளுர்வாசிகள் என்பதால், சிங்கள மொழி பயன்படுத்தப்பட்டதுடன் கணிசமான சீன மொழி பேசும் வெளிநாட்டு தொழிலாளர்கள் இருப்பதால், மெண்டரின் மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டது என அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டிருந்தது.

துறைமுக நகரம் பொது மக்களின் பார்வைக்காக திறந்த பின்னர் அனைத்து பெயர் பலகைகளும் அரசாங்கத்தின் சட்டத்திற்கு அமைய மும்மொழிகளிலும் அமைக்கப்படும் எனவும் துறைமுக நகர நிர்மாணிப்பு நிறுவனம் தனது அறிக்கையில் கூறியிருந்தது.

You My Like This Video



1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US