அநுர அரசுக்கு எதிர்வினையாகிய காவுகொள்ளப்படவிருந்த தமிழரின் காணிகள்!
வடக்கு, கிழக்கில் உள்ள காணிகள் இராணுவ பிரசன்னம், உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற அடிப்படையில் பெரும்பாலும் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், செயற்றிட்டங்களுக்கான சுவீகரிப்பும் சிங்களக் குடியேற்றங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்ற்று வருகின்றன.
திட்டமிட்ட நில அபகரிப்புக்களுக்கு மேலதிகமாக வனவள திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் காணி தொடர்பாகச் செல்வாக்குச் செலுத்தக் கூடிய அரசாங்க அதிகாரத் தரப்பினரிடம் மக்கள் அதிக காணிகளை இழந்திருக்கின்றார்கள் என்பதை இங்கு கூறியாகவேண்டும்.
இவ்வாறு உள்நாட்டு யுத்தத்துக்கு பின்னர் காணிகளை கையகப்படுத்திய முந்தைய அரசாங்கங்களை போல தேசிய மக்கள் சக்தியும் காணி சுவிகரிப்பு முறையை கையாண்ட விதம், அழுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை எதிர்வினையாக பெற்றுள்ளது.
இந்நிலையில் வடக்கிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டு மீளப்பெறப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பின்னணி குறித்து விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி....





போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
