தமிழர் தரப்பின் அழுத்தம்! முறியடிக்கப்பட்ட அநுர அரசாங்கத்தின் காணி அபகரிப்பு திட்டம்
வட மாகாணத்திலுள்ள 4 மாவட்டங்களின் இருக்க கூடிய காணிகளை அரசக்காணியாக அபகரிக்கப்பதற்குரிய வர்த்தமானி அரசாங்கத்தால் மீளப்பெற்றுள்ளமையானது பெரும் வெற்றி என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்றையதினம்(27) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவையின் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ,
“அந்த வகையில் நாடாளுமன்றத்தில் இதனை கொண்டுவந்து பாரிய அழுத்தத்தை எற்படுத்துவதற்கு பலர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
அதில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேணை கொண்டுவந்தபோது அதனை வழிமொழிந்து அதனை ஆதரித்த இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கு நன்றியைத் தெரிவிக்கொள்கின்றேன்.
ஏனைய தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கும் நன்றியைக் கூறுக்கொள்கின்றேன்.
நாங்கள் தமிழ்த்தேசிய பேரவையாகக் கொழும்பில் இருக்கக் கூடிய வெளிநாட்டு தூதரங்களுக்கு சென்று இந்த விடயம் தொடர்பில் வர்தகமானியை மீளபறவைக்கவேண்டும் என்று கூறியிருந்தோம்.
நாடாளுமன்றத்தில் இவற்றை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த அழுத்தங்களை வழங்காது விட்டால் இதனைச் செய்திருக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 18 மணி நேரம் முன்

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
