தமிழ் நீதிபதிகள் நேர்மையாக செயற்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்: செல்வம் அடைக்கலநாதன் விசனம்
தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலையில் இருக்கக் கூடாது. அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத் தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்பொழுது வெளிப்படையாக தெரிகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (29.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையிலேயே இந்த நாட்டில் நீதித்துறை நேர்மையான முறையாக இருந்ததா என்ற கேள்வி எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரீ.சரவணராஜா தன்னுடைய பதவியை துறந்துள்ளார்.
அவருடைய கருத்துக்களை பார்க்கின்ற போது சட்டமா அதிபர் கூட இதில் சம்பந்தப் பட்டிருக்கிறார் என்ற செய்தி அதில் அறியக்கூடியதாக உள்ளது. நீதித்துறை எங்கே செல்கிறது? அவர் தமிழ் பிரதேசத்தில் இருந்து கொண்டிருக்கிறார்.
ஒருவர் நியாயமான தீர்ப்பை வழங்குகின்ற ஒரு நிலையிலேயே இருந்து கொண்டிருக்கும் நிலையில் தென்னிலங்கையிலே இனவாதமாகவும், அவர் ஒரு தமிழராகவும் பார்க்கப்படுகின்ற நிலை காரணமாக அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையை நம்பும் மக்கள்
இதை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். நீதித்துறை என்பது நியாயமான வகையில் செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
மக்கள் நீதித்துறையை நம்பித்தான் இன்றைக்கு நீதிமன்றத்திற்கு சொல்கிறார்கள்.
ஆனால் இப்பொழுது இருக்கின்ற நிலையை பார்க்கும் போது தமிழ் நீதிபதிகளுக்கு அவர்கள் நியாயமாக செயல்படுகின்ற வாய்ப்பை தடுக்கின்ற, அச்சுறுத்துகின்ற ஒரு செயல்பாடாக தான் இந்த நீதிபதியின் பதவி விலகல் செய்தி கூறுகிறது.
சட்டமா அதிபரின் அழுத்தம் உள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். எனவே அவரும் பதவி விலகுவது சிறந்தது என கருதுகிறேன். எனவே நாங்கள் ஒரு புரட்சியை
ஏற்படுத்துவதன் ஊடாகவே நீதித்துறையை நடு நிலமைக்கு கொண்டு வர முடியும் என தெரிவித்துள்ளார்.





அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
