கொலைகாரர்களால் அதிரும் தமிழர் தாயகம் சஜித் வெளிப்படுத்திய தகவல்
வடக்கில் கொலைகார கும்பலால் பொதுமக்கள் பாரதூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்த தற்போதைய அரசாங்கத்தால் அதனை தடுக்க முடியாது போயுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இவ்வாறான கொலையாளிகளை கைது செய்யும் விடயத்தில் மந்தகதியில் செயற்படாமல் துரிதமாக செயற்பட்டு நாட்டில் குறிப்பாக வடக்கில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,