தமிழ் பாடநெறி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் தமிழ் வரலாறு மற்றும் கலைப்பிரிவு பாடங்களில் இருந்து தமிழ் வரலாறு மற்றும் கலை பாரம்பரியம் தொடர்பான எந்த உள்ளடக்கமும் நீக்கப்படவில்லை என கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போது செயல்படுத்தப்படும் வரலாற்றுப் பாடத்திட்டத்தில் தமிழ் மன்னர்கள் தொடர்பான உள்ளடக்கம் அடங்கும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு பாடம் தொடர்பில் சிங்களம் மற்றும் தமிழ் என தனித்தனியாகக் கற்பிக்கப்படவில்லை.
தமிழ் பாடநெறி
அதற்கு பதிலாக, பல்வேறு வரலாற்று காலகட்டங்களில் இருந்து வந்த மன்னர்கள் மற்றும் இராஜ்ஜியங்களை உள்ளடக்கிய இலங்கை வரலாறாக இந்தப் பாடம் கற்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கலைப் பாடம் நடைமுறை நடவடிக்கைகள் மற்றும் குறிப்பிடத்தக்க கலைப்படைப்புகளின் ஆய்வு ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்று பிரதமர் மேலும் தெளிவுபடுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் எஸ். ஸ்ரீதரன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.