கட்சி தாவிய 16 பேரை நீக்கத் தமிழரசுக் கட்சி நடவடிக்கை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக உள்ளபோதும், பிற கட்சிகளின் வேட்புமனுவில் போட்டியிடும் 16 பேரை ஏன் கட்சியில் இருந்து நீக்கக் கூடாது என கட்சியின் செயலாளரினால் விளக்கம் கோரி, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிரந்தர உறுப்பினராக இருந்து கொண்டு பிற கட்சிகளில் போட்டியிடும் உறுப்பினர்களிடமே முதல் நடவடிக்கையாக விளக்கம் கோரப்பட்டுள்ளது.

விளக்கம் கோரல் கடிதம்
இவ்வாறு கட்சியில் இருந்து விலக்கும் நடவடிக்கையில் யாழ். மாநகர சபை உறுப்பினர் இராமலிங்கம் இராகினி உட்பட 16 உறுப்பினர்களுக்குக் கட்சியின் செயலாளரினால் விளக்கம் கோரல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த உள்ளூராட்சி சபைகளில் தற்போது அங்கம் வகிக்கும்
உறுப்பினர்களுக்கே கட்சியால் இவ்வாறு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்ட
கடிதத்துக்கு 14 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam