தமிழ் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம் - கனடாவில் கிடைத்த கோடிக்கணக்கான பணம்
கனடாவில் தமிழ் பெண் ஒருவர் லொட்டரியில் பெருந்தொகை பணப்பரிசை வென்றுள்ளார்.
ஒன்றாறியோவின் பிராம்டனை சேர்ந்தவர் சீலாவதி செந்தில்வேல் (47) என்ற மூன்று குழந்தைகளின் தாயான இவர் கடந்த 25 ஆண்டுகளாக லொட்டரி விளையாட்டில் பங்கெடுத்து வரும் நிலையில் சமீபத்தில் லொட்டோ 6/49ல் இரண்டாம் பரிசாக $54,885 (ரூ.1,47,03,551.36) பணப்பரிசை வென்றுள்ளார்.

இது தொடர்பில் சீலாவதி தெரிவிக்கையில்,
நான் வாங்கிய லொட்டரிக்கு பரிசு விழுந்ததா என store-க்கு சென்று பார்த்தேன். அப்போது எனது டிக்கெட்டை ஸ்கேன் செய்கையில் 'பிக் வின்னர்' என பார்த்தபோது, மிகவும் உற்சாகமடைந்தேன். என் உடலே நடுங்கியது. உடனடியாக என் மகனிடம் இந்த மகிழ்ச்சி தகவலை சொன்னேன். எங்கள் இருவராலும் இதை நம்ப முடியவில்லை.
பரிசு பணத்தை வைத்து உடனடி திட்டங்கள் எதுவும் போடவில்லை, இருப்பினும் குடும்பத்தாருக்கு உதவ திட்டமிட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam