தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் பொது வேட்பாளர்
ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார பயணத்தின் ஒரு கட்டமாக இன்றையதினம் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பிரசாரப் பயணம்
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் இருக்கும் திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியிருத்தார்.

இவ் அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி பிரசாரப் பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam