தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான பிரசாரத்தைத் திட்டமிடும் கூட்டம்
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான பிரசாரத்தைத் திட்டமிடும் கூட்டங்கள் தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், வவுனியாவில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான பிரசாரத்தைத் திட்டமிடும் கூட்டம் ஒன்று இடம்பெற்றள்ளது.
குறித்த கூட்டமானது இன்று (25.08.2024) வவுனியா விருந்தினர் விடுதியில் நடைபெற்றுள்ளது.
பிரசாரப் பணிகள்
இந்த கூட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கட்சி சார் அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் பங்கு பற்றியுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, பிரச்சாரப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் ஒரு பெரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், நாளை மறுநாள்(27) செவ்வாய்க்கிழமை வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பிரசாரப் பணிகளை தீவிரமாக முன்னெடுப்பது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி
இதேவேளை, தமிழ்ப் பொது வேட்பாளருக்கான பரப்புரை நிகழ்வினை கிளிநொச்சியில் முன்னெடுப்பதற்கான முன்னேற்பாட்டு கலந்துரையாடலொன்று இன்று(25.08.2024) கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் பொதுக்கட்டமைப்பினர், மாவட்ட பொது அமைப்புக்கள், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், அரசியற் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.