ஆசியாவின் அதி முக்கிய இடத்தில் தமிழீழம்: இராணுவ ஆய்வாளர் காரசார பதில்
ஆசியாவின் அதி முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமான தமிழீழ நிலப்பரப்பு மாறிக்கொண்டிருக்கின்றதாகக் கூறிவரும் நிலையில், அதற்கு இராணுவ ஆய்வாளர் திபாகரன் பதிலளித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே திபாகரன் இது தொடர்பில் பல விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஆசியாவின் அதி முக்கிய இடத்தில் தமிழீழம் மாறிக்கொண்டிருக்கின்றதாகக் கூறிவருகிறமை நிச்சயமாக உண்மை. அதாவது இந்து சமுத்திர பிராந்தியத்தினுடைய மத்திய பகுதியிலேயே இலங்கை தீவு அமைந்துள்ளது.
இந்து சமுத்திரத்தின் வட மத்திய இந்த பகுதியாக இந்த கண்டம் தான் ஆசியா - ஆபிரிக்கா நிலக்கடண்டத்தையும் உள்ளடக்கிய பகுதியாக இருக்கின்றது.
இந்த பகுதிதான் சர்வதேச வர்த்தகத்திற்குத் தேவையான பகுதியும் கூட. இந்தப்பகுதி கடற் போக்குவரத்துக்கள் நிகழும். ஆவவே உலகினுடைய 3இல் இரண்டு கடற் போக்குவரத்து இந்து சமுத்திரத்தின் ஊடாக நிகழ்கிறது.
ஆகவே ஆபிரிக்கா - ஆசியக் கண்டத்திலிருந்தும் அதாவது தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கிலிருந்தும் மூலப்பொருட்களைக் கடல் மார்க்கமாக கொண்டு செல்லும் பாதையாக இந்து சமுத்திரத்தின் தேவை உலகிற்கு இருக்கின்றது.
அத்துடன், இந்த கடல் மார்க்க பாதையை கட்டுப்பாட்டுக்ளுள் வைத்திருப்பவர்கள் தான் வர்த்தகத்தில் முதன்மை செலுத்த முடியும்.
ஆகவே இந்த வர்த்தகத்துக்கு முதன்மை செலுத்த வேண்டுமாக இருந்தால் இன்று சீனாவுக்கும் மேற்குலகிற்குமான போட்டி இந்து சமுத்திரத்தில் உருவாகியுள்ளது.
எனவே இந்து சமுத்திரத்தின் ஆளுகை யார் வைக்கப்போகின்றார்கள் என்ற போட்டிக்குள் தமிழர் தாயகம் அகப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri